6422 நன் பொன் நல்ல பொன்
6423 நன் மொழி தேவபாணி, நல்ல வார்த்தை
6424 நன் வாய் நன்றாகிய உண்மை
6425 நன்றாமோ இன்பத்தை தருமோ
6426 நன்று அறம், சுவர்க்கம், நல்வினை, ஆக்கம், நற்குணம், நல்லதொன்று, நன்மை, நன்றாயிருந்தது, மிகவும்
6427 நன்றும் பெரிதும்
6428 நன்றே பெரிதும்
6429 நன்னர் நன்மை
6430 நன்னர் நடு நன்மையுடைய நடுவு நிலைமை
6431 நன்னராட்டி நன்மையையுடையாள்
6432 நன்னன் செங்கண் மாத்து வேளும் மைலைபடுகடாத்தின் பாட்டுடைத் தலைவனுமாகிய சிற்றரசன்
6433 நன்னன் வேண்மான் நன்னன்
6434 நன்னுதல் நன்றாகிய நுதல், நன்றாகிய நுதலையிடையவள், பெண்
6435 நன்றி சான்ற கற்பு நன்மை அமைந்த கற்பு
6436 நன அகன்ற, அகற்சி
6437 நனஞ்சாரல் அகற்சியையுடைய சாரல்
6438 நனந்தலை அகன்ற இடம், திசை, மண்டலம்
6439 நனவிற் புணர்ச்சி வெளியில் உண்டாம் கூட்டம்
6440 நனவின் வாரா நயனிலாளன் வெளியாக வாராத உறவில்லாதவன்
6441 நனவினால் நனவின்கண்
6442 நனவு பகல், மெய்ம்மை, சாக்கிர அவத்தை, வெளி, ஆடு களம், விழிப்பு, அகலம், மெய்யான காலம்
6443 நனி மிகுதி, மிகுதியாய்
6444 நனி ஏய்க்கும் மிகவும் பொருந்தும்
6445 நனிச் சிவந்த வடு மிகுதியையுடைத் தாய்ச் சிவந்த வடு
6446 நனி பற்றுதல் மிகப் பிடித்தல்
6447 நனை அரும்பு, பூவரும்பு, கள்
6448 நனைத்த அரும்பிய
6449 நனைத்தர நனைத்தலைச் செய்யாநிற்க
6450 நனைத்தரும் அவ் வாய் நனைத்தலைச் செய்யும் அழகிய வாய்
6451 நனைதல் அரும்புதல், தோன்றுதல்
மேல்