6452 நா நடு, நாக்கு, நீர் வடிய விடுவதற்கு நாக்குப் போலச் செய்திருப்பது
6453 நாகம் சுரபுன்னை, தேவருலகம், நாகப்பாம்பு, யானை
6454 நாகரிகர் கண்ணோட்ட முள்ளவர்
6455 நாகன் நாலை கிழான் நாகன்
6456 நாகு இளமை, பசு, பெண்
6457 நாஞ்சில் கலப்பை, வள்ளுவன் என்ற தலைவற்கு உரியதாயிருந்த ஒரு மலை
6458 நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில் மலைக்குரியனான தலைவன்
6459 நாஞ்சிலான் பலராமன்
6460 நாட் கள் காலையில் உண்ணும் மது
6461 நாட் காலம் காலை
6462 நாட் கொடி விசேட நாளையறிவித்தற்குக் கட்டும் துவசம்
6463 நாட் சோறு காலையுணவு
6464 நாட்டம் ஆராய்ச்சி, சோதிட நூல், கண்
6465 நாட்படுதல் பலநாள் செல்லல்
6466 நாட்பலி விடியற் காலப் பலி
6467 நாட்பு ஞாட்பு, போர்
6468 நாட் பூ நாளைக் காட்டும் பூ
6469 நாட் போது அன்றலர்ந்த பூ
6470 நாடல் ஆராய்தல்
6471 நாடன் குறிஞ்சி நிலத் தலைவன், முல்லை நிலத் தலைவன்
6472 நாடு இடை விலங்குதல் இருவர் நாட்டையும் இடையில் தடுத்துப் பிரித்தல்
6473 நாடுங்கால் ஆராயுங்கால்
6474 நாடுதல் ஆராய்தல், விரும்புதல், தேடுதல்
6475 நாடு படு நன் கலம் பகைவர் நாட்டிலுள்ள நல்ல அணிகலன்
6476 நாண் கயிறு, வில்லின் நாண், நாணம், மானம்
6477 நாண் அடுதல் நாணத்தைத் தொலைத்தல்
6478 நாண் ஒடுக்கம் நாணால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கம்
6479 நாண் புடை வில்லின் நாண் ஒலி
6480 நாண நாணும் படி
6481 நாணல் வெட்கப்படுதல்
6482 நாணி இறைஞ்சுதல் நாணிக் கவிழ்தல்
6483 நாணிலி நாணம் இல்லாதவன்
6484 நாணுத்தகவு நாணும் தகுதி
6485 நாணுதல் பொறாதிருத்தல், கூசுதல்
6486 நாணும் நிறையும் உணர்கல்லாள் மகளிர்க்கு இயல்பாகிய நாணையும் நிறை என்னும் குணத்தையும் தாங்குதல் வேண்டும் என்று அறியாள்
6487 நாத்தழும்பிருத்தல் பல முறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல்
6488 நாப்பண் நடு
6489 நாம் நாமம், அச்சம்
6490 நாம்பு மெல்லிய கொடி
6491 நாமம் அச்சம், நிறைவு
6492 நாய் சூதாடு கருவி, நாய் என்னும் மிருகம்
6493 நார் அன்பு, பன்னாடை, பூத் தொடுக்கும் நார், மட்டை முதலியவற்றின் நார், நூல்
6494 நார் அரி கள், பன்னாடையால் அரிக்கப்பட்ட தேறல்
6495 நார் உரி மென்கால் நாரை உரித்த மெல்லிய தண்டு
6496 நாரிகை பெண்
6497 நால்கு நான்கு
6498 நால் செவி தொங்கும் காது
6499 நால் வயின் நான்கு திசை
6500 நாலை நாலூர்; நாகன் என்னும் தலைவனது ஊர்
6501 நாலுதல் தொங்குதல்
6502 நாவாய் மரக்கலம்
6503 நாழி ஒரு வகை முகத்தலளவை
6504 நாழிப் போழ்து நாழிகையின் முகூர்த்தம்
6505 நாள் இளமை, காலை, தினம், நட்சத்திரம்
6506 நாள் அங்காடி காலைக் கடை
6507 நாள் அணி காலையில் அணியும் அணி
6508 நாள் அவை நாளோலக்கம்
6509 நாள் உலந்த வாழ்நாள் முடிந்த
6510 நாள் இருக்கை நாளோலக்கம்
6511 நாள் இரை நாட் கால உணவு
6512 நாள் மகிழ் நாள் மகிழ் இருக்கை
6513 நாள் மகிழ் இருக்கை நாளோலக்கம்
6514 நாள் மலர் அன்றலர்ந்த பூ
6515 நாள் மழை பருவ மழை
6516 நாள் மீன் அசுவதி முதலிய நட்சத்திரப் பொது, நட்சத்திரம்
6517 நாள் மேயல் காலை மேய்ச்சல்
6518 நாளினும் நாள்தோறும்
6519 நாற்பால் நான்கு வருணம்
6520 நாற்ற உணவு அவியாகிய உணவு
6521 நாற்றம் மணம், புழுகு முதலியவை
6522 நாற்றி தொங்கவிட்டு
6523 நாற்றிசையும் நாலு திக்கும்
6524 நாற்றிசையும் நடுக்குறூஉம் மடங்கற் காலை நாலு திக்கும் சேர நடுக்கமுறும் ஊழிமுடிவாகிய காலம்
6525 நாற்றுதல் தொங்கக் கட்டுதல்
6526 நாறு இருங் கூந்தல் நாறுகின்ற கரிய கூந்தல்
6527 நாறுதல் கமழ்தல், தோன்றுதல்
6528 நான் மறை முதல்வன் அந்தணன்
6529 நான் மாடக் கூடல் மதுரை
6530 நானம் புழுகு
மேல்