6803 |
நெக்க |
நெகிழ்ந்த |
6804 |
நெகிழ்த்தல் |
தளர்த்துதல், மெலிவித்தல் |
6805 |
நெகிழ்தல் |
கட்டுத் தளர்தல், நழுவுதல், நிலை குலைதல், மெலிதல், அவிழ்தல், கழலுதல் |
6806 |
நெகிழ்ந்ததை |
கழன்றது |
6807 |
நெஞ்சத்த |
நெஞ்சத்திலுள்ளன |
6808 |
நெஞ்சத்தால் |
நெஞ்சத்தோடே |
6809 |
நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ |
நெஞ்சாகிய அகலில் உயிர் திரியாகக் கொளுத்திய காமத் தீ |
6810 |
நெஞ்சம் அழிந்து உகல் |
நெஞ்சம் அழிந்து கெட்டுப் போதல் |
6811 |
நெஞ்சமொடு |
நெஞ்சத்தாலே |
6812 |
நெஞ்சு |
நடு, தைரியம் |
6813 |
நெஞ்சு அழுங்குதல் |
மனம் வருந்துதல் |
6814 |
நெஞ்சு அறிந்த கொடியவை |
தன் நெஞ்சு அறியவே செய்த கொடிய தீவினைகள் |
6815 |
நெஞ்சு ஆறு கொண்டாள் |
என் நெஞ்சைத் தான் வரும் வழியாகக் கொண்டு விட்டாள் |
6816 |
நெஞ்சு புகல் ஊக்கத்தார் |
நெஞ்சு விரும்பிய ஊக்கத்தையுடையவர் |
6817 |
நெஞ்சு வாய் அழிதல் |
உள்ளக் கருத்தை வாய் விட்டு மொழிதல் |
6818 |
நெட்டிரா |
நெடிய இரவு |
6819 |
நெடிது |
தாமதமாக, நீண்ட தன்மை யுடையது |
6820 |
நெடிது உள்ளல் |
இடைவிடாது நினைத்தல் |
6821 |
நெடிதுயிர்த்தல் |
நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல், பெருமூச்சுவிடுதல் |
6822 |
நெடிய |
தன் மேம்பாட்டை உணர்த்தும் சொற்கள் |
6823 |
நெடியோன் |
பெரியோன், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் |
6824 |
நெடியோன் மகன் |
திருமால் மகனாகிய காமன் |
6825 |
நெடுங் கடை |
பெரிய வாயில் |
6826 |
நெடுங்கை வன் மான் |
யானை |
6827 |
நெடுங்கை வேண்மான் |
ஓர் உபகாரி |
6828 |
நெடுந்தகை |
நெடிய தகையினையுடையான், பெரிய தகுதிப்பாடுடையான் |
6829 |
நெடுநகர் |
கோயில் |
6830 |
நெடு நன் மான் தெண் மணி |
உயர்ந்த நல்ல குதிரையிற் கட்டின தெளிந்த மணியோசை |
6831 |
நெடு நீர் |
ஆழமாகிய நீர் |
6832 |
நெடும் பீலி |
நெடிய தோகை |
6833 |
நெடுமான் அஞ்சி |
அதியமான் நெடுமான் அஞ்சி |
6834 |
நெடுமிசை |
உச்சி |
6835 |
நெடுமிடல் |
அதியமான் நெடுமான் அஞ்சியின் இயற்பெயர் |
6836 |
நெடுமை |
ஆழம், உயர்ச்சி |
6837 |
நெடுமொழி |
தன் மேம்பாட்டுரை, வஞ்சினம், வீரம் |
6838 |
நெடுவசி |
ஊசித் தழும்பு, போர் வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாம் ஊசித் தழும்பு |
6839 |
நெடுவரி |
ஒழுங்கு |
6840 |
நெடு வெள் ஊசி |
புண் தைக்கும் ஊசி |
6841 |
நெடு வேள் |
நெடிய முருகக் கடவுள் |
6842 |
நெடு வரைக் கவான் |
நீண்ட மூங்கிலையுடைய பக்க மலை |
6843 |
நெதி |
செல்வம் |
6844 |
நெய் |
வெண்ணெய், வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள், தேன், புழுகு |
6845 |
நெய் உலை |
உணவு அமைத்தற்காக நெய் காய்கின்ற உலை |
6846 |
நெய் கடை பால் |
நெய்யைக் கடைந்து வாங்கின பால் |
6847 |
நெய்கனி காய் |
புன்னைக் காய் |
6848 |
நெய்த்தோர் |
இரத்தம் |
6849 |
நெய்தல் |
நெய்தல் திணை, நெய்தல் திணையின் உரிப்பொருளாகிய இரங்கல், ஒரு பேர் எண், கருங்குவளை, நெய்தற் பூ, வெள்ளாம்பல், சாப்பறை |
6850 |
நெய்தலங் கானல் |
ஓர் ஊர் |
6851 |
நெய்தல் நெறித்தல் |
நெய்தற் பூவைப் புறவிதழொடித்து மாலை கட்டிச் சூடுதல் |
6852 |
நெய்ம்மிதி |
நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளம் |
6853 |
நெய்ம்மிதி கவளம் |
நெய் கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு |
6854 |
நெரித்தல் |
நெருங்குதல் |
6855 |
நெரித்து |
நெருங்கி |
6856 |
நெரிதல் |
நெருங்குதல் |
6857 |
நெரிதர |
நெரிய |
6858 |
நெரிதருதல் |
வளைந்து செல்லுதல் |
6859 |
நெரிய |
நெளிய |
6860 |
நெரியல் |
மிளகு |
6861 |
நெருங்குதல் |
கோபித்தல், நெருக்குதல் |
6862 |
நெருஞ்சி |
ஒரு முட் பூடு |
6863 |
நெருநல் |
முன்னைநாள், நேற்று |
6864 |
நெருநை |
நெருநல், நேற்று |
6865 |
நெருப்பு |
அக்கினி |
6866 |
நெல் |
தானிய வகை, மூங்கிலின் நெல் |
6867 |
நெல்லி |
மரவகை |
6868 |
நெல்லி வட்டு |
நெல்லிக் காயாகிய விளையாட்டுக் கருவி வகை |
6869 |
நெல்லின் ஊர் |
சாலியூர் |
6870 |
நெளிதல் |
குழிதல், வருந்துதல், அசைதல், வளைதல் |
6871 |
நெற்றம் |
நெற்று |
6872 |
நெற்றி |
கொண்டை |
6873 |
நெற்றிச் சிவலை |
நெற்றியிலே சிவந்த சுட்டியினையுடைய ஏறு |
6874 |
நெற்று |
முதிர்ந்து உலர்ந்த காய் |
6875 |
நெறி |
அறல், ஒழுக்கம், சுருள், நெறித்தல், புரியின் முடக்கம், புறவிதழ் ஒடிக்கை, முடக்கம், வளைவு, விதி, நெறித்த மயிர், வழி |
6876 |
நெறிஇருங் கதுப்பு |
நெளிந்த கரிய கூந்தல் |
6877 |
நெறி செய்த நெய்தல் |
புறவிதழை ஒடித்த நெய்தற் பூ |
6878 |
நெறித்த |
குழன்ற |
6879 |
நெறித்தல் |
ஒடித்தல் |
6880 |
நெறித்தன்ன |
பிடித்து விட்டாற் போன்ற |
6881 |
நெறித்து |
புறவிதழை ஒடித்து |
6882 |
நெறித்து விட்டன்ன |
வலிய முறித்து விட்டாற் போன்ற |
6883 |
நெறி தாழ் இருக் கூந்தல் |
அறல் தங்கின கரிய கூந்தல் |
6884 |
நெறிந்த குரல் |
அறல் பட்ட பற்றம் |
6885 |
நெறிப்படுதல் |
ஒழுங்குபடுதல், முறைமைபடுதல் |
6886 |
நெறிப்பு |
கூந்தலின் நெளிவு |
6887 |
நெறி மருப்பு |
எருமை, மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு |
6888 |
நென்னல் |
நேற்று |