7666 | பீடர் | பெருமையுடையவர், வலிமையுடையார் |
7667 | பீடு | பெருமை, சிறப்பு, வலி |
7668 | பீடுடையாளர் | பெருமையையுடைய தொழிலையாளுவார் |
7669 | பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் | பீர்க்கம் பூவினது அழகைத் தன்னிடத்தே கொண்ட பிறை போலும் நுதல், பசலையையுடைய நெற்றி |
7670 | பீரத்து அலர் | பீர்க்கம் பூ |
7671 | பீரம் | பீர்க்கு |
7672 | பீரை | பீர்க்கு |
7673 | பீலி | தோகை, மயில் தோகை, மயில் இறகு |
7674 | பீலிக் கண்ணி | மயிலிறகாற் செய்யப்பட்ட தலைமாலை |
7675 | பீள் | இளங்கதிர், சூல் |
7676 | பீள் வாடும் நெல் | கதிர் வாடும் நெல் |
மேல் |