கெடல்வேண்டின் - ஒருவன் தான் கேடடைவதை விரும்பினனாயின்; அடல்வேண்டின் ஆற்றுபவர் கண் இழுக்கு- பிறரைக் கொல்ல விரும்பின் அப்பொழுதே கொல்லவல்ல பெரியாரிடத்துத் தவற்றை; கேளாது செய்க - தன் அமைச்சரின் அல்லது துணைவரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது செய்க. "காலனுங் காலம் பார்க்கும் பாராது வேலீண்டு தானை விழுமியோர் தொலைய வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே" (புறம்.41) "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தலரிது." (குறள்.29) என்பவற்றால் அடல்வேண்டி னாற்றும் இருவகைப் பெரியாரையும் அறிந்துகொள்க.
|