எச்சமென் றென்றெண்ணுங் கொல்லோ வொருவரா
னச்சப் படாஅ தவன்.

 

ஒருவரால் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கால் - தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ?

மக்கள்,பொருள்,புகழ் என்னும் மூவகை யெச்சங்களுள், புகழே சிறந்ததாதலின் , ' என்னெண்ணுங் கொல்லோ ' என்றார். ஓகாரம் அசைநிலை.

' கொல் ' ஐயப் பொருளிடைச் சொல். 'படா.அ' இசைநிறை யளபெடை.இழிவு சிறப்பும்மை தொக்கது.