நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

 

மேலாயவர்- உயர்ந்தோர்; வேலி நாண் கொள்ளாது- தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் கொள்வதன்றி; வியன்ஞாலம் பேணலர்- பரந்த ஞாலத்தைக் கைப்பற்ற விரும்பார்.

நாணும் ஞாலமுமாகிய இரண்டிலொன்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைமை நேர்ந்த விடத்து, ஞாலத்தையே தெரிந்துகொள்வர் என்பதாம். பழி பளகு, நேராமற் காத்தலின் நாணை 'வேலி' என்றார்.மன்னும் ஓவும் அசை. என்றார் பரிமேலழகர்.முற்காலத்தில் ' மன்னோ' என்பது ஆடூஉ முன்னிலையாயிருந்தமை முன்னரே 990-ஆம் குறளுரையிற் கூறப்பட்டது.நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார் என்னும் உரை, முரண்பாடு கொள்ளுதலின் பொருந்தாது.