இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலு நிரப்பு.

 

நெருநலும் கொன்றதுபோலும் நிரப்பு-நேற்றும் வந்து என்னைக் கொன்றதுபோலும் துன்புறுத்திய வறுமை; இன்றும் வருவது கொல்-இன்றும் வருமோ? வந்தால் ஐயோ! நான் என் செய்வேன்!

இதுமுந்தின நாள் அரும்பாடுபட்டுத் தன் வயிற்றை நிரப்பிய ஓர் இரப்போனின் இரங்கற் கூற்று. உம்மைகள் முறையே இறந்ததும் எதிரதும் தழுவிய எச்சம். ’கொல்’ ஐயம். ’ஓ’ இரங்கலிடைச்சொல். ’நிரப்பு’ மங்கல வழக்கு.