ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.

 

கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு - தம் அலகைப் பெயர்த்தற்கு வளைத்த கையினையுடையா ரல்லாதார்க்கு; கயவர் ஈர்ங்கை விதிரார் - கீழ்மக்கள் தாம் உண்ட எச்சிற் கையில் ஒட்டிய இரண்டொரு பருக்கையையும் உதறி வீழ்த்தார்.

கயவர் வலியார்க்கன்றி மெலியார்க்கு இம்மியுங் கொடார் என்பது, இக்குறளால் கூறப்பட்டது.