குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

 

இதுவுமது

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - என்னை முகநோக்கி உற்றுப்பார்க்காத தன்மையே யன்றி ; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்- ஒரு கண்ணைச் சுருக்கிப் பர்த்தாற்போல என்னை நோக்கிப் பின் தனக்குள்ளே மகிழ்வாள்.

சிறக்கணித்தாள் என்பது எது கைநோக்கி வலித்தது. சிறங்கணித்தல் வெளிப்படையாய் நிகழாமையாற் 'போல' என்றான். நோக்கி என்பது சொல்லெச்சம். இனி இவளை யடைதல் உறுதியென்பது குறிப்பெச்சம்.

இதுவரை கூறப்பட்டது தலைமகன் தலைமகள் குறிப்பினை யறிதல். இனிக் கூறப்படுவன தலைமகன் தோழி குறிப்பினை யறிதலும் தோழி அவ்விருவர் குறிப்பினையு மறிதலுமாம்.