முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

 

( கூட்டுதற் குடம்பட்ட பாங்கற்குத் தலைமகன் தலைமகளதியல்பு கூறியது . )

வேய்த்தோளவட்கு - பசுமூங்கில் போலுந் தோளினையுடையவட்கு ; மேனி முறி - உடம்பு மாந்தளிர் நிறமாயிருக்கும் ; முறுவல் முத்தம் - பல் வெண்முத்துப் போன்றிருக்கும் ; நாற்றம் வெறி - இயல்பான மணம் நறுமணமாயிருக்கும் ; உண்கண் வேல் - மையூட்டிய கண்கள் வேல்போற் கூராயிருக்கும் .

பெயராலும் ஒர் இயல்பு கூறப்பட்டது . ' முறி ' ' முறுவல் ' ஆகு பெயர்கள் . உவமைகள் வுருவக வடிவிற் கூறப்பட்டன . இத்துறை உன்னாற் கருதப்பட்டவளை அறியேனென்று சேட்படுத்திய தோழிக்குத் தலைமகன் சொன்னதுமாம் .