கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து.

 

காதலர் கண் உள்ளாராக - எம் காதலர் எப்போதும் எம் கண்ணுள் ளிருக்கின்றாராதலால் ; கரப்பாக்கு அறிந்து - அவர் மறைவதையறிந்து ; கண்ணும் எழுதேம் - கண்ணிற்கு மையிடுதலுஞ் செய்யேம் .

இடைவிடாது காணப்படுகின்றவரைப் பிரிந்தாரென்று கருதுவது எங்ஙனந் தகும் என்பதாம் . ' கரப்பாக்கு ' தொழிற்பெயர் . ' பாக்கு ' தொழிற்பெயரீறு . இழிவு சிறப்பும்மை இடமாற்றப்பட்டது .