நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்.

 

நன்றே தரினும்-அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவுநிலை திறம்புவதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.

நன்மை தராமையின் 'நன்றே தரினும்' என்பது எதிர்மறை யும்மை தன்னை மட்டுமன்றித் தன் எச்சத்தையுந் தாக்குமாதலின், 'அன்றேயொழிய விடல்' என்றார். விடல் என்பது அல்லீற்று வியங்கோள்.