நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பே மெனல்.

 

(இதுவுமது)

கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்-அயலாரும் பகைவரும் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்துவிடுவோமென்று கருதுதல்; நெய்யால் எரிநுதுப்பேம் என்ற அற்று-நெய்யை வார்த்து நெருப்பை அவிப்போமென்று கருதுவதையொக்கும்.

வளர்க்குங் கரணம் தளர்க்குங் கரணமாகாது என்பதாம். 'ஆல்' அசைநிலை.