கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு
மிதுநகத் தக்க துடைத்து.

 

(இதுவுமது)

தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது-இக்கண்கள் அன்று எண்ணிப்பாராது தாமே காதலரைத் திடுமென்று நோக்கிவிட்டு, இன்றும் அவரைக் காணவில்லையென்று தாமே யிருந்தழுகின்ற செய்தி ; நகத்தக்கது உடைத்து-சிரிக்கத் தக்க தன்மையை யுடையது.

தாம் ஒன்றை விரும்பிச் செய்துவிட்டுத் தாமே அதன் விளைவு பற்றி யழுவதுபகுத்தறிவாளர் நகையாடத் தக்க செய்தியாதலின், 'நகத்தக்க துடைத்து என்றாள். கண்கள் என்பது அதிகாரத்தால் வந்தது. ஏகாரம் பிரிநிலை.