தணந்தமை சால வறிவிப்ப போலு
மணந்தநாள் வீங்கிய தோள்.

 

(இதுவுமது)

மணந்தநாள் வீங்கிய தோள்- காதலர் மணந்த நாளில் மகிழ்ச்சி மிகுதியாற் பூரித்த உன் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும்- இன்று அவர் பிரிந்தமையை விளக்கமாகப் பிறர்க்கு உணர்த்துவன போல் மெலிவடைகின்றன. இது கூடாது.

அன்று பூரித்ததும் இன்று மெலிந்ததும் ஆகிய இரண்டையும் கண்டவர், உண்மையுணர்ந்து தலைமகனைக் குறை கூறுவர் என்பதாம்.