கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

 

(நாணால் அவள் அது சொல்லாதவிடத்து , அவன் தோழிக்குச் சொல்லியது.)

கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு-என் கண்ணிற்கு நிறைந்த அழகையும் பச்சை மூங்கிலொத்த தோளையு முடைய என் இளங்காதலிக்குப் பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்மை நிறைந்த இயல்பு மிகுதியாகவுள்ளது.

பெண்ணிறைந்த நீர்மை யென்றது அச்ச மட நாணங்களை மீண்டும் பிரிவுண்டென்று அஞ்சியதால் அச்சமும், இல்லாத பிரிவை ஏற்றிக்கொண்டாதால் மடமையும் . அதை வெளிவிட்டுச் சொல்லாமையால் நாணமும் வெளிப்பட்டன.