ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல் .

 

வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா .

வழுக்குதல் கால்தவறுதல்போல் வாய்தவறுதல் ; அதாவது மறத்தல் . ' வாயால் ' என்று வேண்டாது கூறியது , ' செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் ' என்பதிற்போல ( கூக ) நல்ல சொற்களே ' பயின்ற தன்மையை உணர்த்தற்கு . ஏகாரம் தேற்றம் . ' சொலல் ' பால்பகாவஃறிணைப் பெயர் .