தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது.

 

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே யுண்டாகும் ; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆதலால் , அத் தவத்தை முறபிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.

தவம் பல பிறப்புக்களில் தொடர்ந்து செய்ய வேண்டிய அரும் பெரு முயற்சி யாதலாலும், அறிவும் ஆற்றலும் உடையவரே அதை முற்ற முடியச் செய்யத்தக்கவராதலாலும், ஒரே பிறப்பில் எல்லாரும் அதை மேற்கொள்ள முடியாதாம்.