கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்.

 

கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்-கல்லாதவனுக்கு ஒரோவழி தற்செயலாகத்தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அவனைப் பாராட்டுமளவில் அதை உயர்வாகக் கொள்ளார்.

உம்மை அருமை குறித்து நின்றது. ஒட்பம்=அறிவொளி. ஒள்-ஒட்பு-ஒட்பம். ஒள்-ஒளி, ஒரோவழி=ஏதேனுமொரு சமையம், மிக அருகி. கல்லாதவனுக்குத் தோன்றும் ஒண்கருத்து. ஏ ர ல் (நத்தை) மணலில் ஊருங்கால் நேருங் கீறலில் தற்செயலாக அமையும் ஓர் எழுத்துவடிவம் போன்றதாகலின், அதை அவனது உண்மையறிவின் விளைவாகக் கருதார் என்பதாம்.