பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.

 

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல் ; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம் .

காலத்தொடு பொருந்துதல் காலந்தவறாமற் செய்தல் . 'தீராமை 'என்றதனால் தீருந்தன்மைய தென்பது பெறப்படும் . வினைகள் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் ஒரு போதும் நீங்கா தென்பது கருத்து .