அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
நன்குடையான் கட்டே தெளிவு.

 

அன்பு - அரசனிடத்தன்பும் ; அறிவு - அரசனுக்கு ஆவனவற்றையும் வினைக்கு வேண்டிய வற்றையும் அறியும் அறிவும் ; தேற்றம் - வினைசெய்தற்கண் கலங்காமையும் ; அவாவின்மை - பொருள் கைசேர்ந்தவழியும் தீயவழியாற் பொருள் வருமிடத்தும் அதன்மேல் ஆசையின்மையும் ஆகிய; இந்நான்கும் நன்கு உடையான் கட்டே தெளிவு - இந்நாற்குணங்களையும் உறுதியாகவுடையவன் மேலதே அரசன் வினையை விட்டிருக்குந் தெளிவாம்.

இந்நாற்குணமும் நன்கு உடையான் வினைக்கண் திறம்பானென்று அரசன் கருதுவனாகலின் , அவனிடத்ததே தெளிவென்று இடவுரிமைப்படுத்திக் கூறினார் . கண்ணது - கட்டு (கண்+ து) . ஏகாரம் தேற்றம்.