கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.

 

ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்- ஆட்சிச் செல்வம் தங்களிடம் நெடுங்காலம் நிற்றலை விரும்பும் அரசர்; கடிது ஓச்சி-குற்றவாளியைத் தண்டிக்கும் போது தண்டனையைக் கடுமையாகக் காட்டி ; மெல்ல எறிக- மென்மையாகச் செய்க.

கல்லை அல்லது வேலை எறிபவன் கையை மிகவுயர்த்திப் பின்பு தாழ்த்தி மெல்ல எறிவதுபோல, தண்டனையை அளவிறந்து செய்வது போற்காட்டுவது குற்றவாளி அஞ்சுதற் பொருட்டும், அளவாகச் செய்வது குடிகள் அஞ்சாமைப் பொருட்டும், வேண்டுமென்பதாம்.