ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.

 

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றரால் எல்லார் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்து அவற்றால் விளையும் பயனை ஆராய்ந்தறியா அரசன் ; கொற்றம் கொளக்கிடந்தது இல் - வெற்றியடையக் கூடிய வேறு வழியில்லை.

நிகழ்ந்த செய்திகளையும் அவற்றின் விளைவையும் அறியாத அரசன் ,திடுமென்று பகைவரால் தாக்கப்படின் வெற்றியடைதற்கு வழியில்லை யாதலின், 'கொற்றங்கொளக் கிடந்ததில் ' என்றார். இதைக் கொளக்கிடந்தது கொற்றமில்லை எனச் சொன்முறைமாற்றி தோல்வியின்றிக் கொள்ளக்கிடந்ததொரு வெற்றியில்லை என்றுரைப்பினுமமையும்.