ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்.

 

ஆதும் என்னும் அவர் -யாம் மேன்மேல் உயர்வேம் என்னும் உயர்வெண்ணங் கொண்டவர்; ஓளி மாழ்கும் செய்வினை ஓதல் வேண்டும் - தம் மதிப்புக் கெடுவதற் கேதுவான வினைகளைச் செய்யாது விட்டுவிடுதல் வேண்டும்.

மதிப்புக் கெடுவதற் கேதுவான வினைகளைச் செய்பவர் மேன் மேலுயர முடியாது என்பது கருத்து. ஓவுதல் என்பது ஓதல் எனக் குறைந்து நின்றது. 'ஒளிமாழ்குஞ் செய்வினை' ஒளி மாழ்குவதற் கேதுவாகச் செய்யும் வினை என்க. 'ஓஒதல்' , 'ஆஅதும்', என்பன இசைநிறை யளபெடைகள். ஒளியென்பது உடலோடு கூடி வாழும் நாளில் உளதாகும் நன்மதிப்பு.