கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும்.

 

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி விட்டுவிடாமல் பொருள் நோக்கிச்செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்- அவ்வினைகள் ஒருகால் முடிந்தாலும் அவை தூயவல்லாமையால் பின்பு துன்பத்தையே விளைக்கும்.

முடிதல் வெற்றியாய் முடிந்து கருதிய பொருள் தருதல். ஒருவார் என்பது ஒரார் எனக்குறைந்து நின்றது. 'முடிந்தாலும்' ஐயவும்மை பீழைதருவன வினையும் வினையால் வந்த பொருளும்.