கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

 

கலங்காது கண்ட வினைக்கண்-தெளிவாக எண்ணித்துணிந்த வினை முயற்சியில்; துளங்காது தூக்கம் கடிந்து செயல்-பின்பு மன அசைவில்லாதும் காலந்தாழ்க்காதும் விரைந்து ஊக்கமாகச் செய்க.

தப்பாது பயன் படுமென்றும் வெற்றியாக முடியுமென்றும் தெளிவாக ஆராய்ந்தறிந்த வினையைக் 'கலங்காது கண்ட வினை' யென்றும், மனத்தளர்ச்சியும் உடற்சோம்பலும் வினையைக் கெடுக்கு மாதலின் 'துளங்காது தூக்கங் கடிந்து செயல்' என்றும், கூறினார்.