பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

 

கை அறியாப் பேதை வினைமேற்கொளின் - செய்யும் வகை யறியாத பேதை ஒரு கருமத்தை யேற்றுச் செய்யின்; பொய்படும் ஒன்றோ - அதிற் புரைவிழுதல் மட்டுமோ. புனைபூணும் - அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும்.

'புரைவிழுதல்' துளைபடுதல் போல் உள்ளழிதல். 'புனை முதனிலைத் தொழிலாகுபெயர். பேதை வினைசெய்யின் வினையுங்' கெட்டுத் தானும் கெடுவான் என்பதாம். பொள் - பொய்