அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி.

 

தம் வயின் குற்றம் மறையாவழி- புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து; அற்றம் மறைத்தலோ புல் அறிவு- தம் மரும வுறுப்புக்களை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்ளுதல் சிற்றறிவாம்.

'அற்றம்' ஆடையற்ற நிலை . மறைத்தல் இரண்டனுள் முன்னது கண்ணிற்குத் தோன்றாதவாறு செய்தல்; பின்னது இல்லாதவாறு செய்தல் . அற்றம் மறைத்தலினும் குற்றம் மறைத்தலே உயர்திணை மாந்தனுக்கு இன்றியமையாத தென்பது கருத்து. ஓகாரம் பிரிநலை.