இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து.

 

இகலில் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை- பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு நல்லதென்று அதனை மேற்கொள்வானது உயிர்வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து- நிலைதாழ்தலும் அதன்பின் முடிதலும் மிகநெருங்கியனவாம்.

மிகுதல் மேன்மேல் முனைதல். இனிதாதல் வெற்றிதருதல். 'தவல்' பொருட்கேடும் 'கெடல்' உயிர்க்கேடுமாம். 'நணித்து' என்பதனைத் 'தவலும் நணித்து', 'கெடலும் நணித்து' எனத் தனித்தனி இரண்டற்கும் பயனிலை யாக்குக. தவ்வல் தாழ்தல்.