இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.

 

முள்மரம் இளைதாகக் கொல்க - களையவேண்டிய முள்மரத்தைக் கையினால் எளிதாகப் பிடுங்கியெறியும் கன்றுப் பருவத்தே களையாவிடினும் , இளமரமாயிருக்கும் போதேனும் வெட்டி. விடுக; காழ்த்த விடத்துக்களையுநர் கைகொல்லும் - அங்ஙனமன்றி அது முதிர்ந்தபின் களையின், அது தன்னைப் பலர்கூடி வெட்டினும் அவர் கைகளைப் பொறுத்தற்கரிய அளவு வருத்தும்.

களைய வேண்டிய பகையை அது மெலிதாயிருக்குந் தொடக்க நிலையிலேயே களைந்துவிடுக. அங்ஙனமன்றி அது வலுத்தபின் அதைப் பலர் கூடித்தாக்கினும் அது தாக்குவாரைத் தாக்கும் என்னும் பொருள்தோன்ற நிற்பதால், இதுபிறிது மொழிதல் என்னும் அணியாம். இதனாற் பகையைக்களையும் பருவம் கூறப்பட்டது.