உடம்பா டிலாதவர் வழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று.

 

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப்பொருத்த மில்லாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்போடு உடன் உறைந்த அற்று- ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு கூடிவதிந்தாற்போலும்.

இடச்சிறுமையாலும் உடனுறைவாலும் பாம்பாற் கொல்லப்படுதல் போல், உட்பகையால் அழிவுறுதல் திண்ணமாதலால் அதனொடு கூடி வாழற்க என்பதாம்.உடம்பாடின்மை யென்பது இங்கு அன்பின்மையோடு பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தலையுந் தழுவிய தென்பது ,அதிகாரத்தாற் கொள்ளப்படும், "குடங்க மென்னும் வடசொற் றிரிந்து நின்றது," என்றார் பரிமேலழகர்.அது தென்சொல்லே யென்பதைப் பின்னிணைப்பிற் காண்க.