தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

 

தம் நலம் பாரிப்பார்-கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை உலகத்திற் பரவச் செய்யும் உயர்ந்தோர்; தகை செருக்கிப் புல் நலம் பாரிப்பார் தோள் தோயார்-ஆடல்,பாடல்,ஒப்பனை முதலியவற்றால் தம் திறத்தை மிகுத்துத் தம்மால் ஆடவர் பெறும் இன்பத்தைப் பொருள் கொடுப்பாரிடத் தெல்லாம் பரப்பும் விலைமகளிரின் தோளைத் தீண்டார்.

தகை அழகு.தோயின் புகழ்கெடுமாதலின் 'தோயார்' என்றார். 'தந்நலம்' என்பதில் 'நலம்' ஆகுபொருளது. இம்மூன்று குறளாலும் உயர்ந்தோர் விலைமகளிரைத் தீண்டாமை கூறப்பட்டது.