அகடாரா ரல்ல லுழப்பர் சூதென்னு
முகடியான் முடப்பட் டா ர்.

 

சூது என்னும் முகடியான் முடப்பட்டார் - சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்; அகடு, ஆரார் அல்லல் உழப்பர் - இம்மையில் வயிறார உண்ணப்பெறார்;மறுமையில் நரகத்துன்பத்தால் வருந்துவர்.

பொருளீட்டும் முயற்சியைக் கெடுத்து வறுமையைக் கொடுத்தலால் 'முகடி' யென்றும், புதிதாகப் பொருளீட்டாது பழம் பொருளையும் பணையமாக வைத்திழத்தலால் 'அகடாரார்' என்றும், பொய்யும் வஞ்சனையும் களவும் பழகுதலால் 'அல்லலுழப்பர்' என்றும், கூறினார், வயிறு நிரம்பாமை சொல்லவே, பிற புலன் நுகர்ச்சியில்லாமை சொல்லாமலே பெறப்படும், வீட்டு முகட்டு வளையில் தங்குகின்றவள் என்னும் கருத்துப்பற்றி முகடியென்னப்பட்டாள் போலும்!