நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்

 

பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல் ; நயன் ஈன்று நன்றி பயக்கும் - இம்மைக்கு நேர்ப்பாட்டை ( நீதியை ) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும் .

நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த்தென்சொல் . நேர்மை என்பது நேர்பாட்டையுங் குறிக்கும் பல பொருளொரு சொல் . நேர்பாடு நேர்மையான ஒழுக்கம் . " கோணே நேர்பாடாயிருந்தான் " ( பாரத . சூது .227 ) . ' பண்பு ' என்பது இங்கு அதிகாரத்தால் இனிமைப் பண்பைக் குறித்தது . தலைப்பிரிதல் என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர் .