பக்கம் எண் :

101

412 செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்.

செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும்.

பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது.

2

413 எனைத்தானும் நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும்.

எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும்.

இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.

3

414 இழுக்க லுடையுழி யூற்றுகோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்.

வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.

இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

4

415 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை.

இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.

5