பக்கம் எண் :

103

43. அறிவுடைமை

அறிவுடைமையாவது அறிவாவது இன்னது என்பதும், அதனாலாகிய பயனும் கூறுதல். இது கல்வியும் கேள்வியும் உடையாராயினும் கேட்ட பொருளை உள்ளவாறு உணர்ந்தறிதல் வேண்டுமாதலான், அதன்பின் கூறப்பட்டது.

421 அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.

அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர்.

இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.

1

422 எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.

அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

2

423 உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.

இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.

3