பக்கம் எண் :

106

432 செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லா
தார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து.

பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

2

433 இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.

உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம்.

இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.

3

434 செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.

பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது. அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும். 1

4

435 பற்றுள்ள மென்னும் மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று.

கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று.

இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.

5

436 வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக.

செய்யிற் கெடு மென்றவாறாயிற்று

6


1. இது பரிமேலழகருரை