பக்கம் எண் :

277

1120 அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும்.

இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.

10

113. காதல் சிறப்புரைத்தல்

காதல்சிறப்புரைத்தலாவது தலைமகன் காதல் மிகுதி கூறுதலும் தலைமகள் காதல் மிகுதி கூறுதலுமாம். இது நலம்புனைந்துரைத்தலின்பின் நிகழ்வதொன்றாகலின், அதன் பின் கூறப்பட்டது.

1121 உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.

உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு.

நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.

1122 கருமணியுட் பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற் கில்லை யிடம்.

என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.