1139 காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு நல்லாண்மை யென்னும் புனை. யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.1 9 1140 யாம்கண்ணிற் காண நகுப வறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார். அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான். 1 10 115. அலரறிவுறுத்தல் அலரறிவுறுத்தலாவது இவ்வாறு ஒழுகும் ஒழுக்கத்தினால் வந்த அலரைத் தலைமகள் தோழிக்கு அறிவித்தலும் தோழி தலைமகட்கும் தலைமகற்கும் அறிவித்தலுமாம். நாணித் துறவுரைத்து இரவுக்குறி ஒழுகா நின்ற தலைமகனுக்குத் தோழி அம்பலும் அலரும் ஆகா நின்றன என்று அறிவித்தலான், அதன்பின் கூறப்பட்டது. 1141 கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று. யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது. 1 1142 ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய். ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண் டிற்கும் வரைவானாதல் பயன். 2
1. பரிமேலழகர் உரை. |