பக்கம் எண் :

285

2. கற்பியல்


116. பிரிவாற்றாமை

பிரிவாற்றாமையாவது அலரறிவுறுத்தல் படத் தலைமகன் தலைமகளை வரைந்துகொண்டு இன்புறுமாயினும், பிரியும் காலத்து ஆற்றாமை கூறுதல். மேலதனோடு இயைபும் இது. இது முதலாகக் கற்பு என்று கொள்ளப்படும்.

1151 இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு.

நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.

1

1152 துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை.

இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள்.

முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.

2

1153 இன்னாது இனனில்லூர் வாழ்த லதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.

தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது.

இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.

3

1154 அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு.

நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தெளிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ?

தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.

4