பக்கம் எண் :

287

1159 தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ.

தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ.

தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.

9

1160 அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும் ஒரோ வழிப் பிரிவு நிகழ்தலான் அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது. 1

10

117.படர்மெலிந்திரங்கல்

படர்மெலிந்திரங்கலாவது தலைமகள் தலைமகன் பிரிந்துழிக் கதுமென உற்ற துன்பத்தினால் மெலிந்திரங்குதல். பிரிந்துழியுற்ற துன்பமாவது போனான் என்று கேட்ட காலத்து வருவதோர் மனநிகழ்ச்சி. இது பிரியப்பட்டார்க்கு முற்பாடு தோன்றும் ஆதலான், அதன்பின் கூறப்பட்டது.

1161 துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ?

இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

1


1. இது பரிமேலழகர் உரை.