1162 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. 2 1163 கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும். இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்; இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகா நின்றது. இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 3 1164 காமக் கடல்மன்னு முண்டே யதுநீந்து மேமப் புணைமன்னு மில். காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே. இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது. 4 1165 இன்பங் கடலற்றுக் காமமற் றஃதடுங்கால் துன்ப மதனிற் பெரிது. காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான். அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது. 5
|