1173 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன். முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது. 3 1174 கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது. 4 1175 மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ லறைபறை கண்ணா ரகத்து. எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது. 5 1176 ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் தாஅ மிதற்பட் டது. எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது. இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது. 6
|