பக்கம் எண் :

293

119.பசப்புறுதல்.

பசப்புறுதலாவது பசப்புறுதலால் வந்த வருத்தத்தைத் தோழிக்குத் தலைமகள் கூறுதல். காதலித்தார்க்குக் காதலிக்கப்படும் பொருள் எய்தாக்கால் அவர் நிறம் வேறுபடுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது.

1181 பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றா ரெனின்.

பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்.

இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.

1

1182 விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு.

இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன்தல்வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

2

1183 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி
லள்ளிக்கொள் வற்றே பசப்பு.

முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை.

இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

3