பக்கம் எண் :

295

1188 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற.

காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன்.

இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.

8

1189 சாயலும் நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து.

மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து.

மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையாற் கூறியது.

9

1190 பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நம்நிலைய ராவ ரெனின்.

என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின்.

இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

10

120. தனிப்படர் மிகுதி

தனிப்படர்மிகுதியாவது தனிமையால் வந்த துன்பமிகுதி கூறுதல். யாம் பசப்பால் வருந்துகின்றமைபோல அவரும் வருந்துவார் என்றும், புணர்ச்சி இடையறாமல் இனிது நடக்கும் என்றும் நினைத்துத் தலைமகள் தனது துன்பத்தினைக் கூறுதலான, அதன்பின் இது கூறப்பட்டது.

1191 பருவரலும் பைதலுங் காணான்கொல் காம
னொருவர்க ணின்றொழுகு வான்.

தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.

1