1219 காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து. நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்? இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது. 9 1220 நனவென வொன்றில்லை யாயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன். நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். 1 10 123. பொழுதுகண்டு இரங்கல் பொழுது கண்டு இரங்கலாவது மாலைப்பொழுது கண்டு தலைமகள் வருந்துதல். ஏனைப்பொழுதில் வருத்தமிலரோ எனின், பிரியப்பட்டார்க்கு எல்லாக் காலமும் வருத்தமுளவாயினும், விடியலும் நண்பகலும் போலாது மாலைப்பொழுது வருத்த மிகுதலால், இது கூறப்பட்டது. 1221 மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது. 1
1. இது பரிமேலழகர் உரை. |