பக்கம் எண் :

305

1226 புன்கண்ணை வாழி மருண்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் றுணை.

மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும்.

இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.

6

1227 காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.

7

1228 காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.

காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும்.

இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.

8

1229 பதிமருண்டு பைத லுழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும்.

மதி - மானம்

9