1230 பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது. 10 124. உறுப்புநலனழிதல் உறுப்பு நலனழிதலாவது தலைமகளது உறுப்புகள் நலன் அழிந்தமை கூறுதல். காதல் மிக்கு இரங்குவார் அக்காதலை அயலார் அறியாமல் அடக்கின காலத்து வெம்மையுற்ற கொடிபோல, அனைத்து உறுப்பும் வாடுதலின், இது பொழுதுகண்டு இரங்கலின்பின் கூறப்பட்டது. 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று. 1 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது. 2 |