1237 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூச லுரைத்து. நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ? இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. 7 1238 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன. 8 1239 முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது. 9 1240 கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று. 10 |